ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் செம ஷாக்..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் கடந்த சில தினங்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இதற்கிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயரந்து ரூ.53,360-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,670க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 16) சவரன் ரூ.52,520-க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,565க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட் 17 ) கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.91.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை திடீரென உயர்ந்ததால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Read More : போலீசாருக்கு காவல் ஆணையர் வார்னிங்..!! பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!