முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gold Rate | இல்லத்தரசிகளே..!! தங்கம் விலை இன்றைக்கு எவ்வளவு தெரியுமா..?

The price of gold has been high for the past 3 days and has started to decline today.
10:22 AM Aug 03, 2024 IST | Mari Thangam
Advertisement

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று குறைய தொடங்கியுள்ளது.

Advertisement

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,460-க்கு விற்பனையானது. 

இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 03) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51,600-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,450-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,905-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,240-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read more ; 10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு கனரா வங்கியில் வேலைவாய்ப்பு…!

Tags :
#Goldprice
Advertisement
Next Article