பரபரக்கும் அரசியல் களம்..!! இன்று அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடும் விஜய்..!! என்ன பேசப் போகிறார்..? உற்று கவனிக்கும் எதிர்க்கட்சிகள்..!!
தமிழக அரசியல் களம் தற்போது முதலே 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாட்டில் விஜய் தனது கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார். இது அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், தங்களுடைய கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும், விசிகவின் தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் இன்று எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சியை விமர்சித்த விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்பதை திமுக விரும்பவில்லை என்றும், இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், விஜய் இன்று மாலை நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்.
விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டிற்கு பிறகு விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் பொது நிகழ்வு இதுவாகும். புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை விஜய் ஆற்ற உள்ளதால், அவர் என்ன பேசுவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது. விஜய்யின் இன்றைய பேச்சை எதிர்க்கட்சியினரும் உன்னிப்பாக கவனிக்கத் தயாராகியுள்ளனர்.