For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாலியல் புகார்.. நடிகர் நிவின் பாலிக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை..!! - FIRல் இருந்து பெயர் நீக்கம் செய்த காவல்துறை

The police have confirmed that there is insufficient evidence in the sexual assault complaint against actor Nivin Pauly.
04:52 PM Nov 06, 2024 IST | Mari Thangam
பாலியல் புகார்   நடிகர் நிவின் பாலிக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை       firல் இருந்து பெயர் நீக்கம் செய்த காவல்துறை
Advertisement

நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை உறுதி செய்துள்ளது.

Advertisement

ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து, பல நடிகைகள் பிரபலங்களுக்கு எதிராக புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிவின் பாலி மீதான வழக்கு விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்திருந்தர். தொடர்ந்து அந்த பெண் குற்றம் சாட்டிய குறிப்பிட்ட நாளில் அவர் கொச்சியில் தங்கி இருந்ததற்கான விடுதி ரசீதையும் நிவின் பாலி தரப்பு வெளியிட்டிருந்தது. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை. அவர் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. நிவின் பாலி டிசம்பர் 14ஆம் தேதி மதியம் முதல் அடுத்த நாள் (டிசம்பர் 15ஆம் தேதி) மாலை கொச்சியில் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் டிச.14,15 2023 அன்று நடிகர் நிவின் பாலி கேரளத்தில் இருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகையில், “நாங்கள் நிவின் பாலியின் பயண சீட்டு விவரங்கள், அவரது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தினோம். இவை யாவும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார். எனவே இந்த பாலியல் புகார் போலி என்று உறுதியாகியுள்ளது. இது பாலியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Read more ; வெப்பம், தூசி மட்டுமல்ல இந்த உணவுப் பொருட்களும் முகத்தில் பருக்களை ஏற்படுத்தும்..!!

Tags :
Advertisement