முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்த அண்ணன் தம்பி.. 20 வருடமா போலீசுக்கே அல்வா கொடுத்த சம்பவம்..!!

The police have arrested a fraudster who has been defrauding his wife, the court and the police for more than 20 years using his brother's name.
11:20 AM Dec 04, 2024 IST | Mari Thangam
Advertisement

உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயரை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி, நீதிமன்றம் மற்றும் போலீசாரை ஏமற்றி வந்த மோசடி நபரை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

சென்னை கோடம்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் பழனி அவரது சகோதரியுடன் சேர்ந்து தன்னையும், தன் மகனையும் தினமும் அடித்து துன்புறுத்துவதாக கூறி இருந்தார். அதன்பேரில் கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பழனி, அவரது சகோதரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது பழனி போலீஸில் தனது அண்ணன் பன்னீர்செல்வத்தின் அடையாள அட்டையை கொடுத்து அவர் பெயரிலேயே நூதன முறையில் மோசடி செய்து சிறைக்கு சென்றார். இவ்வழக்கில் பழனியின் சகோதரியை விடுவித்த மகிளா நீதிமன்றம் பழனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார் பழனி. அப்போது அவரது தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பழனி தலைமறைவானார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பழனிக்கு நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தங்கி எலக்ட்ரீஷியன் கான்ட்ராக்டராக வேலை செய்து வரும் பன்னீர்செல்வத்தை பழனி என நினைத்து போலீஸார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் நிரபராதி என்று கூறிய பன்னீர்செல்வம், தன்னுடைய தம்பி பழனி தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தப்பிவிட்டதாக கூறினார். இதைக் கேட்ட நீதிபதி மற்றும் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பழனியின் மனைவியை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதுதான், பழனி தனது சகோதரர் பன்னீர்செல்வம் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து தப்பியது தெரியவந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்டு தப்பிய பழனி மீது தனியாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோடம்பாக்கம் போலீஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கீழ்க்கட்டளையில் செல்வம் என்ற பெயரில் பதுங்கியிருந்த பழனியை 3 மாத தேடுதல் வேட்டைக்கு பின் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே சிம் கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்கு ஆரம்பித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். உருவத்தில் ஒரே மாதிரியாக இருந்ததால், தனது அண்ணன் பெயரை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி, நீதிமன்றம் மற்றும் போலீசாரை ஏமற்றி வந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read more ; ”இனி படம் பார்த்துவிட்டு வருவோரிடம் விமர்சனம் கேட்கக் கூடாது”..? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Tags :
arrestcourtfraudster
Advertisement
Next Article