For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகள் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி தாக்குதல் நடத்திய காவல்துறை!… 3 பேருக்கு கண் பார்வை இழப்பு!

10:31 AM Feb 17, 2024 IST | 1newsnationuser3
விவசாயிகள் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி தாக்குதல் நடத்திய காவல்துறை … 3 பேருக்கு கண் பார்வை இழப்பு
Advertisement

Farmer protest: விவசாயிகள் போராட்டத்தில் ஹரியானா காவல்துறை நடத்திய பெல்லட் துப்பாக்கி தாக்குதலில் 3 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானா காவல்துறை விவசாயிகள் மீது பெல்லட் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதில் 3 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாட்டியாலாவில் உள்ள கனாவுரைச் சேர்ந்த விவசாயி டேவிந்தர் சிங் பாங்கு ஷேகுபுரியா, 22 என்பவருக்கு கண்ணில் உள்ள துப்பாக்கி துகள்களை அகற்ற நேற்று (வியாழக்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சண்டிகரில் உள்ள செக்டார் 32 இல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஷேகுபுரியாவின் மருத்துவர்கள் நிலைமை மோசமானதை உறுதிப்படுத்தினர். அவர் தனது இடது கண் பார்வையை நிரந்தரமாக இழந்திருக்கலாம் என்று கூறினர்.

இதுபோன்று பெல்லட் துப்பாக்கி தாக்குதலில் குறைந்தது மூன்று விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர் என அமைச்சர் கூறினார். புதன்கிழமை, ஹரியானா காவல்துறை, டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி செல்வதைத் தடுக்கும் முயற்சியில் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஷம்பு (பாட்டியாலா-அம்பாலா எல்லை) மற்றும் கானௌரி (சங்ரூர்-ஹிசார் எல்லை) ஆகிய இரண்டு இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் கூறுகையில், “ 3 விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சண்டிகரில் உள்ள GMCH 32-ல் சிகிச்சையில் உள்ளார். இருவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களை சென்று பார்த்தோம்.

அவர்களின் கண்களை காப்பாற்ற முடியவில்லை. ஹரியானா காவல்துறை தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமல்ல, தோட்டாக்கள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளது என்றார். டாக்டர் மற்றும் அமைச்சரான பல்பீர் சிங் கண் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார். 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெல்லட் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

Tags :
Advertisement