பெற்றோர் இறந்ததாக போலி ஆவணம்.. சொத்தை அபகரிக்க இப்படி கூடவா செய்வாங்க? பாசக்கார மகள் கைது..!!
பெற்றோர் இறந்துவிட்டதாக பொய்யான ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை மாற்றிய மகள் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த இருகூர் பகுதியை சேர்ந்த 76 வயதாகும் பூபதி (வயது 76). இவருக்கு மாலதி (39) என்ற மகள் உள்ளார். மாலதி அவருடைய கணவர் பிரவீன்குமார் (41) உடன் . காஞ்சீபுரம் மாவட்டம் ஆதம்பாக்கத்தில் வசித்து வருகிறார்கள். பூபதிக்கு சொந்தமான 32.71 சென்ட் நிலம் கோவை இருகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து மாலதி தனது கணவருடன் சேர்ந்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டார்.
உடனே அவர் தன்னிடம் இருந்த நில ஆவணங்களுடன் சிங்காநல்லூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நிலத்தை மாலதி போலி ஆவணம் தயாரித்து மோசடியாக மோகன்ராஜ் என்பவருக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தன் மகள் மற்றும் மருமகனிடம் விசாரித்த போது சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பூபதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பூபதி புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், மாலதி தனது பெற்றோர் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்ததும், அந்த போலி ஆவணங்களில் பிரவீன்குமார் சாட்சி கையெழுத்து போட்டு நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாலதி, அவரது கணவர் பிரவீன்குமார் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Read more ; இந்த 5 மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் டிமென்ஷியா ஏற்படலாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!