For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறையில் வைத்து சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்த போலீஸ்..!! இப்போ என்ன வழக்கு தெரியுமா..?

The arrest of jailed Savukku Shankar in another case by the police has caused a stir.
08:52 AM Dec 20, 2024 IST | Chella
சிறையில் வைத்து சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்த போலீஸ்     இப்போ என்ன வழக்கு தெரியுமா
Advertisement

சிறையில் உள்ள சவுக்கு சங்கரை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் பெற்றிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை, மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதில் சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை அலுவலகத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தற்போது, சிறையில் உள்ள சவுக்கு சங்கரை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். தூய்மை பணியாளர்கள், தமிழ்நாடு அரசு வெளியிட்ட திட்டம் ஆகியவை குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படும் நிலையில், புகார் வந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தேனி கஞ்சா வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாததால் சவுக்கு சங்கர் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சிறைக்குச் சென்ற மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததற்கான நகலைச் சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.

Read More : இன்று எண்ணூர் அனல் மின் திட்ட கருத்துக் கேட்பு கூட்டம்..!! ”மூச்சே விட முடியல”..!! ”வாழவே தகுதியற்ற பகுதி”..!! கொந்தளிக்கும் மக்கள்..!!

Tags :
Advertisement