நடுவானில் விமானி திடீர் மரணம்!. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்!. பயணிகள் அதிர்ச்சி!
Turkish Airlines: அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி சென்ற விமானத்தில் விமானி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்பஸ் ஏ350 என்ற விமானம் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்த விமானத்தை 59 வயது பைலட் இயக்கிச்சென்றுள்ளார். நடுவானில் 34,000 அடி உயரத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது விமானி திடீரென மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அது பயனளிக்காததால், விமான உயிரிழந்தார். இதையடுத்து, கேப்டன் மற்றும் துணை விமானி அடங்கிய காக்பிட் குழு, விமானத்தை நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கினர்.
உயிரிழந்த விமானி Ilsehin Pehlivan என அடையாளம் காணப்பட்டுள்ளார். 59 வயதான விமானி 2007 முதல் துருக்கிய ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வருகிறார். மற்றும் பொது இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏவியேஷன் மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெற்றார். மேலும் இவருக்கு கடைசி வழக்கமான மார்ச் மாதத்தில், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
விமானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானியின் மரணம் வருத்தமளிப்பதாகவும் விமானியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Readmore: நவராத்திரி 8ம் நாள்!. பூஜை நேரம், நைவேத்தியம், அலங்காரம் விவரம்!