For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜாமீனில் வெளிவந்த நபர் வெட்டி படுகொலை! கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை.!

05:15 PM Nov 20, 2023 IST | 1Newsnation_Admin
ஜாமீனில் வெளிவந்த நபர் வெட்டி படுகொலை  கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை
Advertisement

மதுரை மாவட்டத்தில் ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

மதுரை மாவட்டம் பரவையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் தத்தனேரி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பதும் வாடிப்பட்டியில் இவர் பார் நடத்தி வந்ததும் தெரிய வந்திருக்கிறது. மேலும் இவரது பார் லைசென்ஸ் ரத்தானதை தொடர்ந்து பறவை பகுதியில் உள்ள மார்க்கெட்டில் சட்டவிரோதமாக மது விற்று வந்திருக்கிறார். இது தொடர்பாக ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட இவ்வாறு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இவரிடம் மது கேட்டதாகவும் அதற்கு இவர் பணம் கேட்டதால் தர மறுத்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக ராம்குமார் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement