For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையே டிவியில் பார்த்து தெரிந்தவர் தானே எடப்பாடி..!! - அமைச்சர் காட்டம்

The person who saw the killing of 13 innocent people in Thoothukudi on TV and knew it himself..!! - Minister Kovi Chehian
12:41 PM Dec 30, 2024 IST | Mari Thangam
தூத்துக்குடியில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையே டிவியில் பார்த்து தெரிந்தவர் தானே எடப்பாடி       அமைச்சர் காட்டம்
Advertisement

அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பதில் அளித்துள்ளார்.

Advertisement

அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார். திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்.

இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்.

Read more ; குறைந்த காலத்தில் 18 கிலோ எடையை குறைத்த இளம் பெண்.. இதுதான் வெயிட் லாஸ் சீக்ரெட்டாம்..!!

Tags :
Advertisement