For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்தவர் உயிரிழப்பு..!! உடல்நிலை சரியாகிவிட்டதாக நினைத்ததால் விபரீதம்..!!

A person who was being treated for drinking poisonous liquor in Kallakurichi escaped from the hospital yesterday but died at home today.
10:55 AM Jun 22, 2024 IST | Chella
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்தவர் உயிரிழப்பு     உடல்நிலை சரியாகிவிட்டதாக நினைத்ததால் விபரீதம்
Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மருத்துவமனையில் இருந்து தப்பிய நிலையில், இன்று வீட்டில் உயிரிழந்தார்.

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நள்ளிரவில் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மருத்துவமனையில் இருந்து தப்பிய நிலையில், இன்று வீட்டில் உயிரிழந்தார். தனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என நினைத்து மருத்துவர்களுக்கே தெரியாமல் வீட்டிற்கு தப்பி வந்த சுப்பிரமணி என்பவர், நேற்று முழுவதும் வீட்டில் நன்றாக இருந்துள்ளார். ஆனால், இன்று அதிகாலையில் அவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Read More : OTT-இல் மிஸ் பண்ணிடாத தரமான காமெடி படங்கள்..!! சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது..!!

Tags :
Advertisement