Rice: தமிழக மக்களுக்கு அதிர்ச்சி!... கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை!.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
high price of rice: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மளிகை பொருள்கள், காய்கறிகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரிசி ஒரு கிலோ 17 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறுவை, சம்பா, காலடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொள்வர். இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை நம்பி இருந்தபோது போதுமான மழை பெய்யவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாதத்திலேயே தண்ணீர் வரத்து இன்றி மேட்டுர் அணை மூடப்பட்டது. இதேபோல் சம்பா சாகுபடியின்போதும் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அரிசி விளைச்சல் சரிவு கண்டது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசியை வாங்கி நிலைமையை சமாளித்தது. எனினும், குறிப்பிட்ட மாநிலங்கள் அரிசி விலையை உயர்த்திவிட்டன. இதனால் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே அரிசி விலை சீராக அதிகரித்து வந்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு தமிழக நகரங்களில் ஒரு கிலோ புழுங்கல் அரிசி 8 ரூபாய் அதிகரித்து ரூ.68 க்கு விற்கப்படுகிறது.
இட்லி அரிசியின் விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் அண்மைய நாள்களாக சில்லரை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு 17 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பால், பெட்ரோல், சிலிண்டர் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில், தற்போது அரிசி விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
English summary: The high price of rice in chennai
Readmore:வைரலாகும் குழந்தை கடத்தல் தொடர்பான ஆடியோ, வீடியோ!… வதந்திகளை பரப்புவோருக்கு எச்சரிக்கை!