பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நிறைவேற்றம்!… பெரும்பாலான கட்சிகள் ஆதரவு..!!
பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்திலேயே கருக்கலைப்பை மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தும் சட்ட முன்வரைவு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்சில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்திருந்தார். அதன்படி பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது. இதன்பிறகு இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு பெரும்பான்மை பெற்றால் இது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனி சிறப்பு அமர்விலும் நிறைவேற்றப்படவேண்டும். இந்த திருத்தத்திற்கு ஆதரவாக தேசிய அவை வாக்களிக்கும். பிரான்ஸின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், திருத்தம் எளிதில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.