For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TVK மாநாடு.. இவர்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது..!!  புஸ்லி ஆனந்த் சொன்ன 21 பதில்கள் இதுதான்..

The party's general secretary Pusli Anand gave answers to 21 questions regarding the conference of actor Vijay's party today at Villupuram DSP office.
07:13 PM Sep 06, 2024 IST | Mari Thangam
tvk மாநாடு   இவர்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது      புஸ்லி ஆனந்த் சொன்ன 21 பதில்கள் இதுதான்
Advertisement

நடிகர் விஜய் தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சியின் மாநில அளவிலான மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Advertisement

அதன்படி தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலை நேரில் சந்தித்து மனு அளித்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திருமால், இதுகுறித்து விழுப்புரம் எஸ்பி, டிஐஜியிடம் கூறியுள்ளார்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மாநாடு நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாருங்கள் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அறிக்கையும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாட்டுக்காக செய்யப்பட இருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அளித்தது.

இந்நிலையில் காவல்துறை சார்பில் மாநாடு நடத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பதிலினை இன்று விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

1. தாங்கள் கொடுத்துள்ள பார்வையில் கண்ட 28.08.2024 ஆம் தேதியிட்ட மனுவில் மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?.

2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விபரம்?

3. தாங்கள் 23.09.2024 அன்று மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? யார் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்றது?

4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களின் பெயர் பட்டியல்.

5. மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவுள்ள நபர்களின் பெயர் விபரம்..

6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.

7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.

8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.

9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.

10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விபரம்).

11. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விபரம் மற்றும் சீருடை விபரம்?

13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவுள்ள விபரம்.

14.மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விபரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்... இதர.,)

15. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவு, பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.?

16. மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விபரம்..

17. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விபரங்கள்..

18. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?

19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விபரம்..

20. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித் தடங்கள் எத்தனை?

21. மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விபரம்.. என 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து இது தொடர்பான பதில்களை புஸ்ஸி ஆனந்த ஆதாங்களுடனும், ஆவணங்களுடனும் அளித்துள்ளார்.

தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆலோசனை செய்து முடிவு சொல்வதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். காவல்துறை அனுமதி கிடைத்தவுடன் தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் தேதியை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் காவல்துறையில் அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த சில தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில்,மாநாடு நடத்தும் நேரம் - மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை எனவும், மாநாடு மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு, ஆண் பெண் முதியவர் விபரம் ஆண்கள்- முப்பதாயிரம், பெண்கள் 15 ஆயிரம், முதியவர் ஐயாயிரம், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை, மாற்றுத்திறனாளிகள் இருக்கை 500 எனவும், மாநாட்டு பந்தலை ஜேபி எண்டர்பிரைஸ், நேர் பஜனை கோவில் திருவேற்காடு மெயின் ரோடு பூந்தமல்லி திருவள்ளூர் அமைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read more ; என்னங்க சொல்றீங்க.. ஹாரன் அடித்தால் சிவப்பு சிக்னல் மாறாதா..!! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த சென்னை போலீஸ்

Tags :
Advertisement