For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை..!! - தமிழக வெற்றிக் கழகம்

The party has announced that TVK will not support anyone in the Erode East by-election.
10:27 AM Jan 17, 2025 IST | Mari Thangam
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை   ஆதரவும் இல்லை       தமிழக வெற்றிக் கழகம்
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் யாருக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் அவர்கள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளை பின்பற்றாமல் தங்களிளின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களை காட்டிலும், ஜன நாயகத்திற்கு எதிராக பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையெ கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேற்தல் போலவே வரும் பிப்பிரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; அடியாத்தி.. ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!!

Tags :
Advertisement