For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடியாக பறந்த உத்தரவு..!! ஹெல்மெட் விஷயத்தில் இனி செம கெடுபிடி..!! வாகன ஓட்டிகள் ஷாக்..!!

A fine of Rs 1,000 will be imposed on those traveling on two-wheelers without wearing a helmet. It has also been ordered that the driving license will be canceled for 3 months.
09:17 AM Jul 26, 2024 IST | Chella
அதிரடியாக பறந்த உத்தரவு     ஹெல்மெட் விஷயத்தில் இனி செம கெடுபிடி     வாகன ஓட்டிகள் ஷாக்
Advertisement

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாங்களாக முன்வந்து ஹெல்மெட்களை அணிய வேண்டும். ஆனால், நிறைய பேர் அப்படி செய்வது கிடையாது. இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஹெல்மெட் விதிமுறையை அரசு தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில், தற்போது அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை போக்குவரத்து கமிஷனர் ராஜ ரத்தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது சாதாரணமான ஒரு விஷயம். இதற்காக இவ்வளவு கடுமையான நடவடிக்கை தேவையா? என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து. ஏனென்றால், நடவடிக்கைகள் கடுமையாக இல்லாததால் தான், நிறைய பேர் விதிமுறைகளை மீறுகின்றனர்.

சாலை போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹெல்மெட் விதிமுறையுடன் சேர்த்து, அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைத்து விட முடியும்.

Read More : இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமா சாப்பிடுறீங்களா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க..!! அதிகம் சாப்பிட முடியாது..!!

Tags :
Advertisement