முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெள்ளநீரில் சிக்கி வீட்டிலிருந்த மூதாட்டி உயிரிழப்பு..! மேலும் 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை..!

11:45 AM Dec 18, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக கன மழை எச்சரிக்கையும், தேனி விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வாகைகுளம்பட்டியில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக தரைபாளம் நிரம்பி வெள்ளம் சென்றுகொண்டிருக்கிறது, இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் எஸ்.இராமலிங்கபுரத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததனால், அப்போது அந்த பகுதியில் 65 வயது மூதாட்டி சங்கிலிகுரு என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது, உடனே வீட்டைவிட்டு வெளியேற முடியாத மூதாட்டி நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். காலையில் மூதாட்டி வீட்டைவிட்டு வெளியே வராததை அடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் பார்த்த போது, தண்ணீரில் சடலமாக அவரது உடல் மிதந்துள்ளது, இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியா அவரது உடலை மீட்டு தண்ணீர் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளநீர் காரணமாக அதே பகுதியில் 3 வீடுகள் இடிந்துள்ளது, பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 அடி அளவுக்கு தண்ணீர் வீட்டுக்குள் உள்ளதால் தண்ணீரை வெளியேற்ற மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள நியாயவிலைக்கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்களுக்கு வழங்க இருந்த பொருட்கள் சேதமாகியுள்ளது. வெள்ளநீரில் சிக்கி வீட்டிலிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மழை அடுத்து 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
Floodflood in tamilnaduflood in tirunelveliமூதாட்டி உயிரிழப்பு
Advertisement
Next Article