For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நரம்பு ஊசி மருந்துக்கு பதில் தண்ணீரை ஏற்றிய நர்ஸ்!… அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் பலி!… அதிரவைக்கும் பின்னணி!

09:33 AM Jan 10, 2024 IST | 1newsnationuser3
நரம்பு ஊசி மருந்துக்கு பதில் தண்ணீரை ஏற்றிய நர்ஸ் … அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் பலி … அதிரவைக்கும் பின்னணி
Advertisement

நியூயார்க்கில் செவிலியர் ஒருவர் பாட்டில்களில் நரம்பு ஊசி மருந்துக்கு பதிலாக தண்ணீரை ஏற்றி சிகிச்சையளித்ததால் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் அஸாண்டே ரோஹ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சாதாரண நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள், அடுத்த சில தினங்களில் திடீரென உயிரிழந்தனர். ஆனால், இதற்கு நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும், இதேபோல், டிசம்பர் மாதத்தில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, உயிரிழந்தர்களுக்கு செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு உடல் உள்ளுறுப்புகளில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் போலீஸார் விசாரித்தனர். இதில் ஒரு செவிலியர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, நோயாளிகளுக்கு நரம்பில் ஏற்றப்படும் வலி நிவாரணி மருந்துகளை திருடி கள்ளச்சந்தையில் விற்றுவந்ததாகவும், திருடிய மருந்துகளுக்கு பதிலாக, காலி மருந்து பாட்டில்களில் குழாய் தண்ணீரை பிடித்து அதனை நோயாளிகளுக்கு ஏற்றியதும் தெரியவந்தது. சுத்திகரிக்கப்படாத குழாய் தண்ணீர் என்பதால் அதில் உள்ள கிருமிகள், நோயாளிகளின் உள்ளுறுப்பில் கடும் தொற்றை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் விளைவாகவே அவர்கள் மரணம் அடைந்துள்ளனர். செவிலியரின் இந்த செயலால் 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

இதேபோல் கடந்த ஆண்டு பிரிட்டனில் 30-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த நர்ஸ், சிசிடிவி கேமரா மூலம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர் கதையாகிவருகின்றன.

Tags :
Advertisement