”கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இந்த தவறை செய்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்தது”..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி..!!
கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வரத் தயக்கம் காட்டியதால் தான் உயிரிழப்பு அதிகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வரத் தயக்கம் காட்டியதால் தான் உயிரிழப்பு அதிகரித்தது. எரியும் நெருப்பில் குளிர் காய்வதைபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு உள்ளது. ஓம்பிரசோல் மாத்திரை பற்றாக்குறை இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எங்களிடம் 4.42 கோடி ஓம்பிரசோல் மாத்திரைகள் இருப்பு உள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 168 பேர். அதில், 9 பெண்கள் மற்றும் 1 திருநங்கை. அவர்களில் 3 பெண்கள் உட்பட 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி வரவழைக்கப்பட்டு உள்ளனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
Read More : பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு..!! இத்தனை மரணங்களுக்கு காரணமான மெத்தனால் எங்கிருந்து வந்தது..?