For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுமுன்…! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு!!

The number of people who died after drinking liquor in Kallakurichi has risen to 59
05:57 PM Jun 24, 2024 IST | Mari Thangam
சற்றுமுன்…  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு
Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இது வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 59பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 106 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more ; சுறா கடித்ததில் “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” பட நடிகர் உயிரிழப்பு..!

Tags :
Advertisement