’அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு’..!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, "நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர். புற்றுநோய்க்கு பயன்படுத்தும் 131 மருந்துகளின் பட்டியல் உள்ளன. அவை அனைத்தும் அட்டவணை 1-ல் உள்ளன. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றுக்கான விலைகள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. விலைக் கட்டுப்பாட்டால், நோயாளிகள் மொத்தமாக ரூ.294 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளனர்.
இவை தவிர, 28 சேர்மானங்கள் உள்ளன. அவை இந்தப் பட்டியலில் இல்லை. ஆனாலும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசு அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தியுள்ளன. புற்றுநோய்க்கான மருந்து குறைவான விலையில் கிடைப்பதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : முதல் நடிகர்..!! நிவாரணப் பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய விக்ரம்..!! எவ்வளவு தெரியுமா..?