For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!! அதிகரிக்கும் டெங்கு பரவல்..! - சுகாதார துறை விடுத்த எச்சரிக்கை

The number of dengue cases in Karnataka is increasing. In this, the spread of dengue fever is increasing in Bangalore. In the last 4 days, 2 people have died in Bengaluru due to dengue.
01:24 PM Jul 01, 2024 IST | Mari Thangam
அதிர்ச்சி   அதிகரிக்கும் டெங்கு பரவல்      சுகாதார துறை விடுத்த எச்சரிக்கை
Advertisement

கர்நாடகா மாநிலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் டெங்கு காய்ச்சலால் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் டெங்குவால் பெங்களூருவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் மாதத்தில் புதிதாக 213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1742 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு வேகமாக பரவி வருவதால் கர்ப்பிணிகள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொசு உற்பத்தியாகும் இடங்களை சுகாதாதாரத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சுகாதார பணியாளர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்பினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிப்புகள்

சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, கர்நாடகா மாநிலம் முழுவதும் மொத்தம் 93,012 சந்தேகத்திற்கிடமான டெங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் 5,878 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரில் 310 பேரும், பெங்களூரு கிராமப்புறத்தில் 467 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தும்கூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களில் 170 பேருக்கும், கடக்கில் ஒரே மாதத்தில் 31 குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாண்டியாவில் 2 மாதங்களில் 150-க்கும் மேற்பட்டோரும், ஹாவேரியில் 500 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 140 சதவீதம் அதிகரித்துள்ளது.

Read more | வெறும் 53 வினாடிகள் மட்டுமே..!! குறைவான நேரம் பறக்கும் உலகின் மிகக் குறுகிய விமானம் பற்றி தெரியுமா..?

Tags :
Advertisement