முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 4,576 காலிப்பணியிடங்கள்.. இந்த தகுதிகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்..!!

The notification for the general recruitment examination to fill the vacancies in all AIIMS Hospitals has been released.
02:06 PM Jan 15, 2025 IST | Mari Thangam
Advertisement

தேசிய அளவில் இருக்கும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் உள்ள குரூப் பி மற்றும் சி பிரிவில் இடம்பெறும் மருத்துவர் அல்லாத காலிப்பணியிடங்கள் பொது ஆட்சேர்ப்பு தேர்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

காலி பணியிடங்கள் : பல்வேறு பிரிவில் உதவியாளர்கள், டேட்டா ஆப்ரேட்டர், நிர்வாக உதவியாளர், உதவி பொறியாளர், இஎன்டி டெக்னீஷியன், எலெட்ரீசியன், வரைவாளர், ஸ்ரோட் கீப்பர், பார்மிஸ்ட், ஜூனியர் கணக்காளர், ஆய்வக உதவியாளர், மருத்துவமனை பல்துறை உதவியாளர், இசிஜி டெக்னீஷியன், நூலகர், ஓட்டுநர், யோக பயிற்சியாளர், வார்டன், பெயிண்டர், செவிலியர் உள்ளிட்ட 4,576 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு : இப்பணியிடங்களில் பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுப்படும். குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாஅக் 35 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் என தளர்வு உள்ளது.

கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு அந்தந்த பதவிக்கு ஏற்ப கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு முடித்து சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள், 12ஆம் வகுப்பு முடித்து தட்டச்சு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலை பட்டம், பொறியியல் படித்தவர்கள் என அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : பொது ஆட்சேர்ப்பு தேர்வு தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://rrp.aiimsexams.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.3,000, எஸ்சி/எஸ்டி/ பொருளாதாரத்தில் பின்தன்கியவர்கள் ரூ.2,400 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2025

தேர்வு தகுதியானவர்கள் அறிவிப்பு நாள் : 11.02.2025

Read more ; திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை.. அந்த ஒரு ஏமாற்றம் தான் காரணம்..!! – நடிகை ஷகிலா ஓபன் டாக்

Tags :
AIIMS Jobs 2025
Advertisement
Next Article