For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறையில் இருந்து வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க NIA அனுமதி!!

The NIA has approved the swearing-in of jailed Abdul Rasheed Sheikh as MP.
02:38 PM Jul 01, 2024 IST | Mari Thangam
சிறையில் இருந்து வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க nia அனுமதி
Advertisement

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ரஷீத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ரஷீத், 2019 ம் ஆண்டு என்.ஐ.ஏ வால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த ஜூன் 29ம் தேதி, ரஷீத்தின் பதவிப் பிரமாணத்தை எளிதாக்குவதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிய மனுவிற்கு பதிலளிக்குமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிரண் குப்தா, என்ஐஏ-வுக்கு உத்தரவிட்டார். மேலும், ஜூலை 1ம் தேதிக்குள் என்ஐஏ பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று அதற்கு என்ஐஏ பதிலளித்துள்ளது. இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு வழங்கியதும் நிறைவேற்றப்படும் எனவும் என்ஐஏ தெரிவித்துள்ளது. பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்வது குறித்து டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.

Read more | தொழில் தொடங்க ரூ.17 லட்சம் வரை மானியம்!! மத்திய அரசின் அசத்தலான திட்டம்..! எப்படி விண்ணப்பிப்பது..?

Tags :
Advertisement