திமுகவுக்கு அடுத்த சிக்கல்!… ஊழல் பைல்ஸ் 3-ஐ ரிலீஸ் செய்த அண்ணாமலை!… அலரும் தலைவர்கள்!
தி.மு.க., எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பைல்ஸ் என்கிற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்து 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுகவின் முறைகேடு புகார்களை அளித்தார் அண்ணாமலை. திமுக அரசின் செயல்பாடுகள், அமைச்சர்களின் சொத்து பட்டியல்கள் அடங்கிய மனுக்களை இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் கொடுத்தார் அண்ணாமலை. ஆளுநரை சந்தித்த பிறகு அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்ட்டிருந்தார்.
அதாவது, திமுக அமைச்சர்கள்/எம்எல்ஏக்கள்/எம்பிகள் மற்றும் முதல் குடும்பம் மற்றும் ரூ. 5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்களுடன் திமுக ஃபைல்ஸ் 2 குறித்து ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கையை கோரி மெமோராண்டம் ஒன்றை சமர்பித்தோம் என்றும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், திமுகவின் ஊழல் பட்டியலின் அடுத்தகட்டமாக பைல்ஸ் 3 என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தி.மு.க., எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் பேசியது தொடர்பான, கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் வெளியிடுவதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல நாடாக்களில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004ம் ஆண்டு முதல் 20014ம் ஆண்டு வரை வேறு பெயரை கொண்டிருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சி.பி.ஐ., ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க., காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டனர். எனவே வரும் நாட்களில் இது தொடர்பாக, மேலும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.