அடுத்த டார்கெட் ஜெருசலேம்!. சிரிய கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை!. நெதன்யாகு என்ன செய்யப்போகிறார்?
Syrian rebels: காசா போருக்கு மத்தியில் சிரிய கிளர்ச்சியாளர்கள் எங்களில் அடுத்த இலக்கு ஜெருசலேம் என்று இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு போர் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. 2011ல் சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கிய நிலையில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் ரஷ்யா உதவியுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தும் மாகாணங்களையும் கைப்பற்றியது.
அப்போது தொடங்கிய உள்நாட்டு போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத், ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுவதற்கு எதிராக இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சிரியாவின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் அலெப்போ நகரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து ஹமாவை கிளர்சசியாளர்கள் கைப்பற்றினர். இந்நிலையில் ஹோம்ஸ் நகரையும் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தற்போது தலைநகர் டமாஸ்கஸையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்தநிலையில், காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு சிரிய கிளர்ச்சியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, டமாஸ்கஸ் முடிவடைந்தது. எங்களது அடுத்த இலக்கு ஜெருசலேம் தான் என்று கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியைக் கைப்பற்றவும் கிளர்ச்சியாளர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
அதில், “இது இஸ்லாத்தின் பூமி, இது டமாஸ்கஸ், முஸ்லிம்களின் கோட்டை. நாங்கள் ஜெருசலேமுக்கு வருகிறோம். பொறுமையாக இருங்கள், காஸா மக்களே, பொறுமையாக இருங்கள்" என்று ஒரு இஸ்லாமிய கிளர்ச்சி செய்தி தொடர்பாளர் சபதம் செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. கிளர்ச்சியாளர்களின் மிரட்டலையடுத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.