அமெரிக்காவின் அடுத்த அதிபர் இந்த இருவருமே கிடையாதாம்..!! அப்படினா இவருதானா..? சொன்னது யார் தெரியுமா..?
நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துவிட்டார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக ஜோ பைடன் கூறியுள்ளார். இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
இதன் மூலம் கமலா ஹாரிஸ் இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுவாரா? அல்லது மீண்டும் ட்ரம்ப் அதிபராவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை ஒரு தீர்க்கதரிசி கணித்துள்ளார். அதாவது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தான் அடுத்த அதிபராக வாய்ப்பிருப்பதாக ஜெமிமா பேக்கிங்டன் என்ற தீர்க்கதரிசி கணித்துள்ளார். 2024 அதிபர் தேர்தலில் மிச்செல் ஒபாமா ஆர்வம் காட்டவில்லை என்றாலும் கூட அவர் தான் அடுத்த அதிபர் என்று அவர் கூறியுள்ளார். உலகின் ஒரே அஸ்பாரகஸ் ஜோதிட வல்லுநரான ஜெமிமா பேக்கிங்டன், டொனால்ட் டிரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் அடுத்த ஜனாதிபதியாக வரமாட்டார்கள் என்று கணித்துள்ளார்.
மிஸ்டிக் வெஜ் என்ற புனைப்பெயர் கொண்ட அவர் அஸ்பாரகஸ் என்ற செடியை தரையில் வீசுவாதல் உருவாகும் வடிவத்தை கொண்டு உலக நிகழ்வுகளை கணிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்று கணித்த அவர், மிச்செல் ஒபாமா தான் அடுத்த அதிபர் எனவும் அவர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குடியரசுக் கட்சி வேட்பாளர் இந்த முறை அமெரிக்க அதிபராக வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.