For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.61 பேருந்து டிக்கெட்.. கூட்ட நெரிசலில் சட்டை கிழிந்தது..!! - 60 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

The Nellai Consumer Grievance Redressal Commission has ordered that the State Transport Corporation should pay Rs.60 thousand to the old man who traveled in the bus.
06:28 PM Aug 30, 2024 IST | Mari Thangam
ரூ 61 பேருந்து டிக்கெட்   கூட்ட நெரிசலில் சட்டை கிழிந்தது       60 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
Advertisement

ஏசி டிக்கெட்டில் சாதாரண பஸ்சில் பயணித்த முதியவருக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சிவசண்முகவேல் (65) - ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் பயணித்துள்ளார்.  அப்போது பேருந்தானது வாகைக்குளத்திற்கு அருகே டயர் பஞ்சராகி நின்றுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகளை சாதாரண மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது வயதான சிவசண்முகவேலையும் நிர்பந்தம் செய்து சாதாரண பேருந்தில் ஏற்றி விட்டதோடு நெருக்கடியான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏற்றி அனுப்பியுள்ளனர். ஆனால் வயோதிக காலத்தில் நிற்க முடியாமல் நின்றுக் கொண்டு பயணம் செய்துள்ளார். இந்த  நிலையில் பேருந்தின் வாசல் பகுதியில் நீட்டிக் கொண்டிருந்த சிதலமடைந்த கம்பியானது சிவசண்முகவேலின் சட்டையை கிழித்து உள்ளது. கிழிந்த சட்டையுடன் தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் மீண்டும் நெல்லைக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து சண்முகவேல் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நெல்லை வண்ணாரப்பேட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், அரசு போக்குவரத்து கழக சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்தத் தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால் 6.5 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது.

Read more ; உஷார்..!! விஷமாகும் கூல்ட்ரிங்ஸ்.. யாரும் வாங்காதீங்க மக்களே..!! – வைரலாகும் மேக்கிங் வீடியோ

Tags :
Advertisement