For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே...! இன்று நடத்தப்பட இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்தி வைப்பு...! மீண்டும் எப்போது தேர்வு...?

The National Testing Agency has announced that the UGC NET exams scheduled to be held today have been postponed.
05:44 AM Jan 14, 2025 IST | Vignesh
தமிழகமே     இன்று நடத்தப்பட இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்தி வைப்பு     மீண்டும் எப்போது தேர்வு
Advertisement

இன்று நடத்தப்பட இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடந்த ஜன.7 அன்று கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் நலனுக்காக, தேசிய தேர்வு முகமை ஜனவரி 15, 2025 அன்று மட்டும் திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் தேர்வு ஏற்கனவே அறிக்கப்பட்ட அட்டவணையின்படி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement