For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கால்நடைகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க திட்டம்...!

The National Highways Authority of India has come up with a plan to prevent accidents caused by livestock on national highways.
06:48 AM Dec 25, 2024 IST | Vignesh
கால்நடைகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க திட்டம்
Advertisement

கால்நடைகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டு வந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளால் ஏற்படும்  விபத்துகளைத் தவிர்க்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த முயற்சி பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள், விலங்குகளின் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் இது உறுதி செய்கிறது.

Advertisement

முதற்கட்டமாக 0.21 முதல் 2.29 ஹெக்டேர் வரையிலான தங்கும் இடங்களுடன், கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடங்கள் உருவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை என்.எச்-334-பி-ன் உத்தரப்பிரதேசம், ஹரியானா எல்லை முதல் ரோஹ்னா பிரிவு உட்பட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்.

இந்த முயற்சி குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் குமார் யாதவ் கூறுகையில், இந்த முயற்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை  உருவாக்குவது மட்டுமல்லாமல், கால்நடைகளை  கவனித்துக்கொள்வதற்கான மனிதாபிமான தேவையை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement