உறுப்புகளை செயலிழக்க செய்யும் மர்ம வைரஸ்!. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
Mysterious Virus: சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வெட்லேண்ட் வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர். இது மூளையை பாதிக்கும் திறன் கொண்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வெட்லேண்ட் வைரஸ் நைரோவிரிடே குடும்பத்தில் உள்ள ஆர்த்தோனைரோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. அதாவது, இந்த புதிய வெட்லேண்ட் வைரஸ் 2019 ஆம் ஆண்டில் உள் மங்கோலியாவில் உள்ள ஒரு பூங்காவில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. உண்ணி கடித்ததையடுத்து, அந்த நபருக்கு சில நாட்களில் பல உறுப்புகள் செயலிழந்தது.
நோயாளியின் இரத்த மாதிரியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணுக்களை சோதனை செய்ததில், ஈரநில வைரஸ் நைரோவிரிடே குடும்பத்தில் உள்ள ஆர்த்தோனைரோ வைரஸ் இனத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்தது. இறப்பு விகிதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வைரஸ் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியின்படி, சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் அறக்கட்டளையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, வடகிழக்கு சீனாவில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டிக் கடித்த சில நோயாளிகளை சோதனை செய்தனர். அவர்களுக்கு உண்ணி கடித்து ஒரு மாதத்திற்குள் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் இந்த தொற்றுக்கு இதுவரை 17 வழக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரநில வைரஸின் மூலத்தைக் கண்டறிய, இப்பகுதியில் வாழும் கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளுடன் சேர்ந்து உண்ணிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பூங்காவில் உள்ள சில செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் குதிரைகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக இந்த வைரஸ் தற்போது வடகிழக்கு சீனாவில் மட்டுமே காணப்படுகிறது, இருப்பினும், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் வலிகள், சளி மற்றும் இருமல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகள் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Readmore: சந்திரயான்-3 வெற்றி!. உலக விண்வெளி விருதை பெற்றார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்!.