For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருமணத்திற்கு முன்பு லிவிங் டுகெதர்..!! பாரம்பரியமாக ஃபாலோ செய்யும் பழங்குடியின மக்கள்..!!

The Muria tribe of Chhattisgarh state has a culture of having sex with anyone at a young age.
05:01 PM Aug 22, 2024 IST | Mari Thangam
திருமணத்திற்கு முன்பு லிவிங் டுகெதர்     பாரம்பரியமாக ஃபாலோ செய்யும் பழங்குடியின மக்கள்
Advertisement

சட்டிஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா பழங்குடியின மக்கள் மத்தியில் வினோதமான பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அங்கு திருமணமானகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி, அங்கு செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.

Advertisement

அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் கோட்டூலுக்கு செல்லலாம். இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல, மகாராஸ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள் அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது. குறிப்பாக கோண்ட் இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்திருப்பது முரியா இன மக்கள் தான்.

கோட்டூல் என்பது ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்ளும் இடம் கிடையாது. அங்கு தேர்வு செய்யும் நபர்கள் ஜோடியாக மட்டுமே தங்க வேண்டும் அவர்கள் தனிமையில் இருப்பதை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அதே போல அந்த கோட்டூலுக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது. அங்கு ஒரு லீடர் இருப்பார் அவர் தான் அந்த ஒட்டு மொத்த கோட்டூலுக்குமே பொறுப்பு, கோட்டூல் என்பது ஒரு செக்ஸ் பள்ளியாகவே இயங்கும் அங்கு உடலுறவு கொள்வது மட்டுமே வேலையில்லை. அங்கு சுத்தமாக இருப்பது எப்படி? மற்றவருடன் நாம் இடங்களை பகிர்ந்து கொள்வது எப்படி? ஒழுக்கம் என்பது என்ன? பொது நல சேவை என்பது என்ன உள்ளிட்ட விஷயங்கள் கற்று தரப்படும்.

Read more ; மக்களே.. இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Tags :
Advertisement