தீபாவளியை முன்னிட்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை..!! லிஸ்டை வெளியிட்ட சிஇஓ சுந்தர்பிச்சை..!!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தற்போதைய கால கட்டத்தில் பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது நமது மக்கள் கூகுளை நாடுவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்தவகையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினார்கள் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார்.
அதாவது, இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்? தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்? தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்? தீபாவளி அன்று ஏன் லட்சுமி பூஜை செய்கிறோம்? தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்? என்ற இந்த 5 விஷயங்களைத் தான் மக்கள் அதிகளவில் தேடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்க்கையில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி குறித்துத் தெரிந்து கொள்ள மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.