For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓனருக்கே ஆப்பு அடித்த தருணம்..!! நல்லவங்க மாதிரி நடிச்சு இப்படி பண்ணிட்டீங்களே..!! கன்னியாகுமரியில் அதிர்ச்சி..!!

The incident of threatening the workers by taking a video of the boss's being together with his wife has created a stir
02:14 PM Oct 22, 2024 IST | Chella
ஓனருக்கே ஆப்பு அடித்த தருணம்     நல்லவங்க மாதிரி நடிச்சு இப்படி பண்ணிட்டீங்களே     கன்னியாகுமரியில் அதிர்ச்சி
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சுற்றுலா வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு ஓட்டுநர்களாக சங்கீத் (28), மற்றும் மிதுன் (26) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். அந்த தம்பதியினர் இரண்டு இளைஞர்களையும் முழுமையாக நம்பி, தங்களது உறவினர்கள் போல் நினைத்து தங்களது வீட்டிற்குள் இயல்பாக வந்து செல்லும் அளவிற்கு பழகி வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தம்பதியினரிடம் தகராறில் ஈடுபட்டு வேலையை விட்டு சென்றுள்ளனர். இவர்கள் வேலையை விட்டு சென்ற சில நாட்களில் தம்பதியினரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து ஒருமுறை பார்த்ததும் அழியக்கூடிய நிலையில் வீடியோ ஒன்று வந்துள்ளது. இதை அவர்கள் ஓபன் செய்து பார்த்தபோது, அதில் தம்பதியினர் இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்று விசாரித்துள்ளனர். ஆனால், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரது செல்போன் வாட்ஸ்அப்பிலும் அதே வீடியோ வந்துள்ளது. இதனை கண்ட அந்த நபர், அந்த வீடியோ தனது செல்போனில் அனுப்பியது உங்களிடம் வேலை பார்த்து வந்த சங்கீத் என்று கூறியுள்ளார். காரணம் அந்த வீடியோ வந்த எண் அவருடைய போனில் ஏற்கனவே பதிவாகி இருந்துள்ளது.

இதனை கொண்டு உறுதி செய்த அவர் தம்பதியினரிடம் கூறியுள்ளார். இதற்கிடையே, தம்பதியினருக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் கால் வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தங்களிடம் உங்களுடைய அந்தரங்க வீடியோ உள்ளது. இதை சோசியல் மீடியாவில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர்.

முதலில் பயந்த தம்பதியினர் பின்னர் தைரியத்தை வர வைத்துக்கொண்டு வெள்ளறடா காவல் நிலையத்திற்கு சென்று இது சம்பந்தமான வாட்ஸ் அப் ஆதாரங்களை காண்பித்து புகாரளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வெள்ளறடா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! அக்.31ஆம் தேதியே கடைசி..!! உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!!

Tags :
Advertisement