For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... ஜனவரி 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்

The Meteorological Department reported that the low pressure area has completely weakened.
05:28 AM Dec 27, 2024 IST | Vignesh
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி    ஜனவரி 1 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு     வானிலை மையம் தகவல்
Advertisement

காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது.

Advertisement

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு செல்லலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement