முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rain: இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...!

The Meteorological Department has stated that there is a possibility of rain until the 23rd.
07:07 AM Jan 21, 2025 IST | Vignesh
Advertisement

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21, 22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
rainrain alertRain notificationTn Rain
Advertisement
Next Article