For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி...! வரும் 12-ம் இடி மின்னலுடன்... வானிலை மையம் கொடுத்த அலர்ட்...!

The Meteorological Department has stated that the low pressure area in Tamil Nadu will strengthen today.
05:27 AM Dec 09, 2024 IST | Vignesh
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி     வரும் 12 ம் இடி மின்னலுடன்    வானிலை மையம் கொடுத்த அலர்ட்
Advertisement

தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. இது நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 -ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.

Advertisement

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

11-ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர். புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

12-ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூார், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர். பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Tags :
Advertisement