முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்

07:31 AM Feb 24, 2024 IST | 1newsnationuser2
Advertisement

Rain notification: நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேலும் 26 முதல் 28-ம்தேதிவரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

English Summary: The Meteorological Department has said that rain may occur at a few places in Tamil Nadu tomorrow.

Advertisement
Next Article