வீட்டின் கூரையை பிளந்து கொண்டு பொத்தென விழுந்த விண்கல்..!! ஒரே இரவில் ரூ.14 கோடிக்கு அதிபதியான சவப்பெட்டி தயாரிப்பாளர்..!!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் கோலாங் பகுதியில் வெல் ஜோஸ்வா எனபவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டின்போது, அவர் தங்கியிருந்த வீட்டின் கூரையில் ஒரு மிகப்பெரிய கல் ஒன்று விழுந்துள்ளது. அந்த கல் தரையைப் பிளந்து கொண்டு 15 சென்டி மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோஸ்வா, அந்த கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பூமியில் இருக்கக் கூடிய கல் கிடையாது என்பதை உறுதி செய்தார்.
பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டதில் அதன் எடை சுமார் 2 கிலோ என்பதும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தெரியவந்தது. மிக மிக அரிதான இந்த கல்லை அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் காலின்ஸ் என்ற தொழிலதிபர் இந்தோனேஷியாவுக்கு சென்று இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
சவப்பெட்டி தயாரிப்பாளராக இருந்த ஜோஸ்வா, ஒரே நாள் இரவில் விழுந்த ஒரேயொரு விண்கல்லால் ரூ.14 கோடிக்கு அதிபராகியுள்ளார். இதுகுறித்து ஜோஸ்வா கூறுகையில், ‘‘நான் சவப்பெட்டிகள் தயாரித்து வந்தேன். அதில், எனக்கு அதிக வருமானம் கிடைக்கவில்லை. இப்போது எனது வாழ்க்கையே மாறியுள்ளது. எனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தேவாலயம் கட்டுவதற்குப் பயன்படுத்த விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.
Read More : புரோ கபடி லீக் தொடர்..!! குஜராத் ஜெயன்ட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை..!!