For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூமியை அழிக்கப்போகும் விண்கல்..!! செயற்கையான குளிர்காலம் உருவாகும்..!! ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது..!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

In the next few years, a meteorite will pass close to Earth, just 29,000 km away.
07:32 AM Sep 12, 2024 IST | Chella
பூமியை அழிக்கப்போகும் விண்கல்     செயற்கையான குளிர்காலம் உருவாகும்     ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது     விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Advertisement

விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக, வெறும் 29,000 கி.மீ தொலைவில் விண்கல் ஒன்று கடந்து செல்ல இருக்கிறது.

Advertisement

உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கிறோம் என்று கேள்வி பலரது மனதிலும் இருக்கும். அதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதமிருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று நம்மால் நிச்சயம் சொல்ல முடியாது. ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே, இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று கூறியுள்ளார்.

இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்துள்ளனர். இப்படி இருக்கையில், பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'அபோபிஸ்' (God of chaos) எனும் விண்கல், விரைவில் பூமியை தாக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு நெருக்கமாக பல விண்கற்கள் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் பூமியை தாக்கிவிடாது. குறிப்பிட்ட சில கற்கள் மட்டுமே ஆபத்தானவையாகும்.

அதாவது 0 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு கிடையாது. இதே 10 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கல், நிச்சயம் பூமியை தாக்கும். இந்த அளவீட்டில் 'அபோபிஸ்' எனும் விண்கல் 4-வது இடத்தில் உள்ளது. அதாவது இந்த விண்கல் 29,483 கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்லும். இது மிகப்பெரிய தூரமாக தெரியலாம். ஆனால், பூமியின் சுற்றளவை விட இந்த தூரம் குறைவுதான். கடந்த 2004இல் இந்த விண்கல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2029ஆம் ஆண்டு பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. ஒருவேளை தவறினால் 2036இல் பூமியை தாக்கும். அப்போது மிஸ் ஆனால் 2068இல் பூமியை தாக்கும் என்று இஸ்ரோ கணித்திருந்தது.

இது பூமியை தாக்கினால், 3 கி.மீ ஆழத்தில், 10 கி.மீ அகலத்திற்கு ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கும். இந்த கல் விழுந்த இடத்தை சுற்றி 320 கி.மீ பரப்பளவுக்கு 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த பரப்பளவில் ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது. இந்த தாக்கத்தால் ஏற்படும் புகையானது வானத்தை சுற்றி படரும். இதனால் சூரிய ஒளி கூட பூமிக்குள் வரமுடியாது. எனவே, செயற்கையான குளிர்காலம் உருவாகும். லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். கோடிக்கணக்கானோர் படுகாயமடைவார்கள். பூமியின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆனால், நல்வாய்ப்பாக இந்த அபோபிஸ் விண்கல் பூமி மீது மோதாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இதனை அவர்கள் துல்லியமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Read More : ’நாசா நினைத்தால் சுனிதாவை மீட்க முடியும்’..!! ’ஏன் செய்யவில்லை’..? உண்மை காரணம் இதுதான்..!!

Tags :
Advertisement