முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ADMK | கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!! பெருகும் ஆதரவால் குஷியில் எடப்பாடி..!!

10:39 AM Mar 11, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் தலைவர் ஜோதிகுமார் தனது கட்சியை கலைத்துவிட்டு தனது கட்சியினருடன் அதிமுகவில் இணைந்து கொண்டார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் தங்களின் நிலைப்பாடுகள் குறித்து அறிவித்து வருகின்றன. பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்யும் முனைப்பில் இருந்துவரும் நிலையில், சிறு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 அணிகளில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்து வருகின்றன. அப்படி சிறு கட்சிகள் பலவும் அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றன.

புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முத்தரையர் சங்கம், மனித உரிமைகள் கழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தவிர 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அதிமுகவுக்கு மேலும் ஒரு கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது. தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் என்ற கட்சியை நடத்திவந்த அதன் நிறுவனத் தலைவர் ஜோதிகுமார், தனது கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்துள்ளார்.

தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவன தலைவர் ஜோதிகுமார், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடப் போவதாகவும், தங்கள் கட்சியை முழுமையாக கலைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More : Certificate | ’இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ்’..!! அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

Advertisement
Next Article