மக்களே.. இந்த தினங்களில் மட்டும் சுங்கசாவடியில் கட்டண வசூல் கிடையாது..!! முக்கிய அறிவிப்பு..
விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்க சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அந்த வகையில் மும்பை- பெங்களூரு மற்றும் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை உபயோகப்படுத்தும் வாகனங்கள் இன்று முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம்.
சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினரிடம் அனுமதி சீட்டு வாங்க வேண்டும். அதற்கான படிவத்தை அந்த மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடலோர பொங்கல் பகுதியில் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து மட்டும் கொங்கன் பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read more ; ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!!