For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதுரை விமான நிலைய விரிவாக்கம் : சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை..!! - மதுரை அமர்வு உத்தரவு

The Madurai bench has issued an order imposing an interim ban on the evacuation of people from the small break area till December 19.
01:55 PM Dec 05, 2024 IST | Mari Thangam
மதுரை விமான நிலைய விரிவாக்கம்    சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை       மதுரை அமர்வு உத்தரவு
Advertisement

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக , சின்ன உடைப்பு கிராமத்தில் வருகிற 19 ம் தேதி வரை நிலம் வழங்கியவர்களின் வீடுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ளதாக கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்து அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் 2009ம் ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தற்போது ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்க உள்ளதாக விமான நிலைய வட்டாரத்தில் தகவல் தெரிவித்ததால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும் 2009 கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை, 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் வீடுகளை இழந்த தங்களுக்கு அரசு மூன்று சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து அதில் மீள் குடியேற்றம்- குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அதுவரை தங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக, சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் வழங்கியவர்களின், நிலங்களை, வீடுகளை வருகிற டிசம்பர் 19 ம் தேதி வரை கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ற உடைப்பு கிராமத்தில் உள்ள நிலம் கையகப்படுத்திய குடியிருப்பு வாசிகளுக்கு, தொழில்துறை நோக்கங்களுக்கான நிலச் சட்டம், 1997, பிரிவு 38ன் கீழ் வழங்கப்பட்ட பாதுகாப்புகளை உறுதிப்படுத்தாமல், நிலம் கையகப்படுத்த கூடாது என கோரி தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more ; பெண்களே..!! உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் நகைகள்..!! இவ்வளவு நன்மைகளா..?

Tags :
Advertisement