கிருஷ்ணகிரி விவகாரம்.. என்ன நடவடிக்கை எடுத்தீங்க..!! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கை செய்யப்படுவதற்கு முன்பு, ஏற்கெனவே எலி மருந்து சாப்பிட்டிருந்த சிவராமன், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும், அன்றைய தினமே அவரின் தந்தை அசோக்குமாரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து இறந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளி கல்வித்துறை அனுமதி இன்றி எப்படி என்சிசி முகாம் நடத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Read more ; மாணவர்கள் தொடர் போராட்டம்..!! காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரி..!!