For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏன் இவ்வளவு தாமதம்..? சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு.. விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

The Madras High Court has ordered the Egmore Economic Crime Court to expeditiously complete the investigation of the foreign exchange fraud case against Sasikala.
01:14 PM Dec 12, 2024 IST | Mari Thangam
ஏன் இவ்வளவு தாமதம்    சசிகலா மீதான அந்நிய செலாவணி வழக்கு   விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு
Advertisement

சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சசிகலா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானது செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் முதல் எதிரியாக ஜெ.ஜெ.தொலைக்காட்சி, இரண்டாவது எதிரியாக தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், மூன்றாவது எதிரியாக தொலைக்காட்சி தலைவர் மற்றும் இயக்குனர் சசிகலா எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிரிகள் பட்டியலில் தன்னுடைய பெயரை முதல் எதிரியாக மாற்றியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, வழக்கு பட்டியலில் முதல் எதிரியாக மாற்றியதால் விசாரணையில் எந்த பாதிப்பும் இல்லை என கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது.

விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய பின் தேவையில்லாமல் வழக்கில் தலையிட்டு ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் விசாரணை தொடங்கியதும் தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எழும்பூர் நீதிமன்றம் வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சசிகலா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.

Read more ; வங்கதேச இந்து துறவியின் ஜாமின் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது..!!

Tags :
Advertisement