For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புழல் சிறையில் செந்தில் பாலாஜி... உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு...!

The Madras High Court has extended Senthil Balaji's judicial custody till September 13.
05:55 AM Sep 06, 2024 IST | Vignesh
புழல் சிறையில் செந்தில் பாலாஜி    உயர் நீதிமன்ற  நீதிபதி அதிரடி உத்தரவு
Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் கடந்த வாரம் அனுமதி வழங்கினார்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags :
Advertisement