காதலியை வைத்து விபச்சார தொழிலில் கல்லா கட்டிய காதலன்..!! காருக்குள் கசமுசா..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகர போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 இளைஞர்கள் மற்றும் 2 இளம்பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ”கைதான லாலு யாதவ் என்பவர் தனது காதலி அஞ்சலியின் உதவியுடன், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து பேசி பழகி வந்துள்ளார்.
லாலு யாதவ், காதலியுடன் பல இடங்களில் சுற்றித்திரிவது வழக்கம். பணம் சம்பாதிப்பதற்காக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தனது காதலியையும் லாலு யாதவ் ஈடுபடுத்தியுள்ளார். காதலி அஞ்சலி 'டேட்டிங்' என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பார். நொய்டாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் டேட்டிங் செயலி மூலம் பெண்ணுக்கு போன் செய்துள்ளார்.
அந்த பெண்ணும் டேட்டிங் செய்ய சம்மதித்துள்ளார். இருவரும் காரில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த இளைஞருடன் உல்லாசமாக இருந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் லாலு யாதவ் உள்ளிட்ட சிலர் காரை சுற்றி வளைத்தனர். பின்னர், அந்த இளைஞர் மிரட்ட ஆரம்பித்தனர். அப்போது, அந்த இளைஞரை பலாத்கார வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன இளைஞர், அங்கிருந்து தப்பி வந்து போலீசில் புகாரளித்துள்ளார். அதன்பிறகு, காதலியுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட லாலு யாதவ் மற்றும் அவருக்கு உதவிய மேலும் 3 இளைஞர்கள், இரண்டு இளம்பெண்கள் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். லாலு யாதவின் காவலில் 12-க்கும் மேற்பட்டோர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களுக்கு வேறு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.