வெடித்து சிதறிய சீன ராக்கெட்..!! நடுவானில் நொறுங்கிய விண்வெளி கனவு!!
சீனாவின் மிகப்பெரிய இணைய சேவைக்கான திட்டமான 18 Qianfan செயற்கைகோள் தொகுப்பை ஏவிய லாங் மார்ச் 6ஏ ராக்கெட் வெடித்து சிதறியதாக அமெரிக்காவின் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான USSPACECOM தெரிவித்துள்ளது.
உலகளாவிய இணைய கவரேஜை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் லாங் மார்ச் 6ஏ ராக்கெட், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்கு போட்டியாக நிறுவப்பட்டது. நான்கு திட ராக்கெட் மோட்டார்கள் பொருத்தப்பட்ட இரண்டு-நிலை பூஸ்டர் ஆகும். Long March 6A ஆனது LEO பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த தொடக்க G60 பணி உட்பட சீனாவின் சமீபத்திய விண்வெளி முயற்சிகளில் இது முக்கியமானது.
செவ்வாய்க்கிழமை வடக்கு சீனாவின் ஷாஞ்சி மாகாணத்தில் உள்ள Taiyuan செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 6ஏ ராக்கெட்(Long March 6A rocket ) ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் ஷாங்காயில் உள்ள Chinese Academy of Sciences' Innovation Academy for Microsatellites-யால் உள்ளது. லாங் மார்ச் 6A ராக்கெட் விண்வெளியில் வெடித்து சிதறிய நிலையில், அவை பூமியின் சுற்றுப்பாதையில் இருப்பதை கண்காணிக்க முடியும் என்று அமெரிக்காவின் விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான USSPACECOM தெரிவித்துள்ளது.
Read more ; சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்!. இந்தியர்களுக்கு எச்சரிக்கை!.