அரசியல் சாணக்கியர் கருணாநிதியை வீழ்த்தி எதிர்க்கட்சி தலைவரான கேப்டன்..!! மாஸ் காட்டிய தேமுதிக..!!
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக கோலோச்சியவர் விஜயகாந்த். 20களின் தொடக்கம் வரை தொடர்ந்து ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் அநியாயங்களை கண்டு பொங்கும் கதாநாயகனாக நடித்து மக்களை கவர்ந்தவர்.
இதன் காரணமாகவே அரசியல் கட்சித் தலைவருக்கு இணையான ரசிகர்கள் ஆதரவு விஜயகாந்துக்கு கிடைத்தது. குறிப்பாக, ரமணா படத்தின் பெரு வெற்றியை தொடர்ந்து விஜயகாந்தின் அரசியல் வருகை மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில், கடந்த 2005 செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தானும் திராவிட சிந்தனை கொண்டவன் என்பதை காட்டினர்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தன்னுடைய கட்சி இருக்கும் என்று பகிரங்கமாக அறிவித்த அவர், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். 2006இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலில் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார். அதில் அதிமுக வசம் இருந்த ஆட்சியை திமுக கைப்பற்றினாலும், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே போட்டியிட்ட தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் விஜயகாந்த். அதற்கு அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு ஒதுங்கிய விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
அவரது தலைமையில் தேமுதிகவும், திமுக, அதிமுகவுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து வாக்கு வங்கியையும் உயர்த்தியது. தமிழ்நாட்டின் 3-வது பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிகவுக்கு பெற்றுக் கொடுத்தார் விஜயகாந்த். அந்த ஆட்சிக் காலத்தில் திமுகவுடனும், கருணாநிதியுடனும் ஏற்பட்ட மனக்கசப்பால் எப்படியாவது 2011 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என கங்கனம் கட்டினார். திமுக - அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என்ற தன்னுடைய வாக்குறுதியை ஓரம் வைத்துவிட்டு அதிமுகவுடன் கரம் கோர்த்தார் விஜயகாந்த்.
அப்போது சினிமாவில் விஜயகாந்தின் எதிரியாக இருந்த வடிவேலுவை அழைத்து தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்தை விமர்சிக்க வைத்தது திமுக. ஆனால், அது திமுகவுக்கே எதிராக திரும்பியது. அதிமுக மற்றும் தேமுதிகவின் வாக்கு வங்கிகள் இணைந்து திமுக ஆட்சியை கவிழ்த்தது. அந்த தேர்தலில் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிபெற்றது. அதிமுக 150 இடங்களில் வென்று பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. திமுகவை விட 6 தொகுதிகள் அதிகமாக 23 இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றதால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த தோல்விக்கு பின்னர் கருணாநிதியால் மீண்டும் முதலமைச்சரே ஆக முடியவில்லை. இந்தியாவிலேயே முதுபெரும் அரசியல் தலைவராகவும், அரசியல் சாணக்கியராகவும் பார்க்கப்பட்ட கருணாநிதியை வீழ்த்தி கட்சி ஆரம்பித்த 6-வது ஆண்டிலேயே எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவியேற்றது தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் தேமுதிகவை திரும்பி பார்க்க வைத்தது. அந்த அளவுக்கு விஜயகாந்த் மாஸ் தலைவராக உயர்ந்தார்.